நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் முதல்-அமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறான். ஆனால், பெரியார் கவுன்சிலர் ஆக வேண்டும் என்று கூட ஆசைப்படவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
76வது குடியரசு தினத்தை ஒட்டி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் தேசிய கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார் துறைமுக நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா.
எங்களோடு வாதிட முடியாதவர்கள் எங்கள் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள். பெரியாரை போற்றும் நீங்கள், ஏன் ஜெயலலிதா தலைமையை ஏற்றீர்கள்? அதிமுகவும், திமுகவும் எல்லாவற்றிலும் கூட்டணி தான் என புதுக்கோட்டையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
`ஜன நாயகன்' படத்தின் 2வது லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் பை-பாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த சாதனையாளரும், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணருமான கே.எம்.செரியன் (வயது 82) காலமானார். செயலிழந்த இதயங்களை மீண்டும் துடிக்க வைத்து, பலருக்கு மறுபிறவி அளித்தவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான பாராட்டு விழாவில் பங்கேற்க மதுரை சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்.
முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள முதியோர் இல்லத்தில் சந்தித்து கொண்ட பத்மேஸ்வர் (வயது 71) ஜெயபிரபா (வயது 65) ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், இந்த காதல் பூத்துள்ளது. பத்மேஸ்வரின் பாடல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு, ஜெயபிரபா காதல் கொண்டதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். திருமணமானாலும் முதியோர் இல்லத்திலேயே தங்கி வாழப்போவதாக இருவருவம் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி: முதுமலை யானைகள் முகாமில் நடந்த குடியரசு நாள் விழாவில், புலிகள் காப்பக இயக்குநர் வித்தியா கொடியேற்றினார். யானைகள் அனைத்தும் தும்பிக்கையை தூக்கி, பிளிர்ந்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.
பத்ம பூஷண் விருது பெறும் நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான பாராட்டு விழாவில் பங்கேற்க அரிட்டாபட்டி புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்.