இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025

Update:2025-01-26 09:07 IST
Live Updates - Page 3
2025-01-26 06:14 GMT

மலையாள இயக்குநர் ஷபி காலமானார். தமிழில் விக்ரம், பசுபதி, மணிவண்ணன் நடிப்பில் வெளியான மஜா படத்தை இயக்கியவர் ஷபி ஆவார். 

2025-01-26 06:07 GMT

"பத்ம பூஷண்" விருது பெறத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித்குமாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

2025-01-26 06:06 GMT

புதுக்கோட்டை: ஜெபகர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை, பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

2025-01-26 05:37 GMT

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பஸ்சின் மீது ஏறி விஜய் செல்பி எடுக்கும் பாணியில் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

2025-01-26 05:29 GMT

குடியரசு தின விழாவில் பிரம்மோஸ் ரக சூப்பர் சோனிக் ஏவுகணை அமைப்பு, பினாக்கா ரக ராக்கெட் லாஞ்சர்கள், ராணுவத்தின் டி-90 பீஷ்மா ரக டேங்கர்கள், பினாக்கா ரக ராக்கெட் லாஞ்சர்கள், அக்னிபான் ரக ஏவுகணை அமைப்பு அணிவகுப்பில் பங்கேற்றது. நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் என்.ஏ.ஜி ஏவுகணை தடுப்பு அமைப்பு கடமைப்பாதையில் அணிவகுத்து சென்றது.

2025-01-26 05:28 GMT

டெல்லியில் நடைபெறும் 76-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பஞ்சாயத்து தலைவர்கள் 600 பேர் பங்கேற்றுள்ளனர். 

2025-01-26 05:28 GMT

டெல்லியில் நடைபெறும் 76-வது குடியரசு தின விழாவில் 300 இசைக்கலைஞர்களின் அணிவகுப்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தோனேசியாவை சேர்ந்த 352 பேர் கொண்ட அணிவகுப்பு& இசைக்குழுவும் பங்கேற்றுள்ளது. 

2025-01-26 05:04 GMT

76-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். குடியரசு தின விழாவில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. குடியரசு தினவிழாவில் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

2025-01-26 04:52 GMT

டெல்லியில் தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினர். 

2025-01-26 04:05 GMT

குடியரசு தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் த.வெ.க. சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்