திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நடுவானில் பீதியை கிளப்பிய விமான பயணி
கொச்சியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், அமெரிக்க பயணி கசன் ஹெலியா (32) என்பவருக்கும் கேரள பயணி டேவ்விட் ஜான் என்பவருக்கும் இடையே நடுவானில் மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. குண்டு வைத்திருப்பதாக கூறியதால் விமானத்தில் பலத்த சோதனை நடைபெற்றது. விமானம் தரையிறங்கியவுடன் இரண்டு பயணிகளிடமும் சென்னை விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வைக்கம் போராட்டம் 100 ஆண்டுகள் நிறைவு ஒட்டி கேரளாவில் திறக்கப்பட்ட பெரியார் நினைவகம், பெரியார் நூலகத்தை நினைவு கூறும் வகையில் அலங்கார ஊர்தி இடம் பெற்றது.
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருது
முதல் பரிசு : மதுரை மாநகரம்
இரண்டாம் பரிசு : திருப்பூர் மாநகர்
மூன்றாம் பரிசு : திருவள்ளூர் மாவட்டம்
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மராட்டியத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்த் திசையில் கேரளா நோக்கிச் சென்ற லாரி மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு நாளை ஒட்டி இன்று கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூண் பாறை, குணா குகை, பைன் காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய பகுதிகளை இலவசமாக பார்வையிடலாம். பேரிஜம் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு யாருக்கும் அனுமதி இல்லை.
குடியரசு தினத்தை ஒட்டி சென்னை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி 4வது முறையாக ஏற்றி வைத்தார்.
விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தனர்.