இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்;
நீதி கிடைக்கும்வரை என் மகனின் அஸ்தியை கரைக்கமாட்டேன்: தற்கொலை செய்த பெங்களூரு பொறியாளரின் தந்தை பேட்டி
பெங்களூருவில் வசித்து வந்த அதுல் சுபாஷ் என்ற ஏ.ஐ. பொறியாளர் அவரது மனைவி தொடர்ந்த வழக்குகளாலும், ஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்தியதாலும் மனமுடைந்து சமீபத்தில் தற்கொலை செய்தார். தற்கொலைக்கு முன்பு அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார். மேலும் மனைவி நிகிதாவும் அவரது தாயார் நிஷாவும் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அதுல் சுபாஷின் மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனனர்.
இதற்கிடையே, தனது மகன் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை மகனின் அஸ்தியை கரைக்கப்போவதில்லை என அவரது தந்தை கூறி உள்ளார். தன் மகனை துன்புறுத்திய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: சதம் விளாசிய ஸ்டீவன் சுமித்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட்டில் அதிக சதம் விளாசியவர் என்ற ஜோ ரூட்டின் (10) சாதனையை ஸ்டீவன் சுமித் சமன் செய்தார்.
அதிமுக எழுச்சியாக உள்ளது; அதிமுகவை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள்; அதிமுக எக்கு கோட்டையாக இன்று இருக்க எடப்பாடி பழனிசாமியே காரணம்: பொதுக்குழு கூட்டத்தில் சிவி சண்முகம் பேச்சு
750 பேருக்கு சைவ உணவு
தம்ரூட் அல்வா, பருப்பு வடை, அப்பளம்,, ஊறுகாய், மோர் மிளகாய், சாம்பார், வத்தக் குழம்பு, தக்காளி ரசம், முட்டைகோஸ் + பீன்ஸ் பொறியல், புடலங்காய் கூட்டு, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, வெள்ளை சாதம், உருளைக்கிழங்கு பொறியல், தயிர், பருப்பு பாயாசம்
6000 பேருக்கு அசைவம்
மட்டன் பிரியானி, சிக்கன் 65, மீன் வறுவல், முட்டை மசாலா, வெள்ளை சாதம், ரசம், தயிறு
பெஞ்சல் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை; பாதுகாப்பு, மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை திமுக அரசு செய்யவில்லை; மக்களுக்கான அடிப்படை தேவைகளை கூட ஒழுங்காக முறையாக செய்யவில்லை என்பது உள்பட 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான தீர்மானங்கள் திமுக அரசை கண்டித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.