இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

Update:2024-12-17 09:08 IST
Live Updates - Page 3
2024-12-17 09:36 GMT

மாநில உரிமைகளுக்கு எதிரானது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, மாநில கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக இந்த மசோதா வலுவிழக்க செய்யும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். 

2024-12-17 09:33 GMT

சென்னையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

2024-12-17 09:29 GMT

இளநிலை நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்தலாமா? என்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை நடத்தி வருவதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

2024-12-17 09:17 GMT

கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்

2024-12-17 09:03 GMT

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-12-17 08:42 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானதையடுத்து அந்த தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தொகுதி காலியாகும் பட்சத்தில் 6 மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்