இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025

Update:2025-10-05 10:07 IST
Live Updates - Page 5
2025-10-05 04:51 GMT

முடிவுக்கு வரும் போர்..? காசாவில் இருந்து படைகளை திரும்பப்பெற இஸ்ரேல் சம்மதம்


பாலஸ்தீனத்தின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து முதல்கட்டமாக படைகளை விலக்கிக்கொள்ள இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.


2025-10-05 04:50 GMT

எச்-1பி விசா கட்டணம் உயர்வு: அமெரிக்க கோர்ட்டில் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக வழக்கு


எச்-1பி விசா கட்டணம் உயர்வு விவகாரத்தில் அமெரிக்க கோர்ட்டில் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


2025-10-05 04:46 GMT

தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

2025-10-05 04:43 GMT

ஓசூரில் கனமழை: அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து


தொடர் கனமழையால் ஓசூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த மருத்துவமனையில் ஒருபகுதி சுவர் ஏற்கனவே கடந்த ஆண்டு சாலைப்பணியின்போது இடிந்து விழுந்தது. இந்த நிலையில், 2 நாட்களாக கிருஷ்ணகிரியின் ஓசூர் பகுதியில் மழை கொட்டி தீர்த்ததால் சுற்றுச்சுவரின் மீதி எஞ்சிய பகுதியும் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


2025-10-05 04:42 GMT

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கத்தின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - அதிகாரிகள் தகவல்


வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிதாக கொண்டு வரப்பட்ட ஆண் சிங்கம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 'லயன் சபாரி' காட்டுப்பகுதியில் விடப்பட்டது. இந்த சிங்கம் தேசிய விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், குஜராத் மாநிலம். ஜூனாகட் நகரில் உள்ள சக்கார்பாக் விலங்கியல் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது.


2025-10-05 04:40 GMT

விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்


திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.


2025-10-05 04:38 GMT

ராசிபலன் (05-10-2025): இந்த ராசிக்காரர்கள் விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பார்கள்


கடகம்

விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். பணவரவுக்கு பஞ்சமில்லை.கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு


Tags:    

மேலும் செய்திகள்