2025-04-18 03:52 GMT
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜப்பான் தூதரக பெண் அதிகாரியை பாலியல் துன்புறுத்தல் செய்த மூத்த பேராசிரியர் ஸ்வரன் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்வரன் சிங் மீது ஏற்கனவே இது போன்ற புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் முன்பாகவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
2025-04-18 03:52 GMT
ஆந்திராவிலிருந்து திருப்பதி வந்த கார், பார்க்கிங்கில் நின்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை இயக்கியதே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.
2025-04-18 03:52 GMT
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நாளை (ஏப்ரல் 18) கட்டணமின்றி சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது.