இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025

Update:2025-02-19 09:27 IST
Live Updates - Page 3
2025-02-19 05:20 GMT

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளியில் மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து அன்பில் மகேஸ் விலக வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

2025-02-19 04:42 GMT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.64,280க்கும் ஒரு கிராம் ரூ.8,035க்கும் விற்பனையாகிறது.

2025-02-19 03:59 GMT

பாலிவுட் நடிகர் அமீர் கானின் தாயார் உடல்நல குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

2025-02-19 03:59 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில், 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் (வயது 58) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

2025-02-19 03:58 GMT

ஒடிசா பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பீகாரைச் சேர்ந்த 3 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

2025-02-19 03:57 GMT

தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை தடை விதித்துள்ளது வனத்துறை.

2025-02-19 03:57 GMT

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (பிப்.21) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் http://upsconline.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். மே 25ல் முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்