இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
டெல்லி முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த ரேகா குப்தா தேர்வு பெற்றுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை மதியம் 12 மணியளவில், பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தான்: பஸ் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் - 7 பேர் பலி
பாகிஸ்தானில் பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவில் தாஸ்மானியா தீவின் கடற்கரையோர பகுதியில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்களில் 90 திமிங்கலங்களே இன்று உயிருடன் உள்ளன.
இவற்றை காப்பாற்ற முடியாத மற்றும் கடலுக்குள் திருப்பி விட முடியாத சூழலில், கடைசியாக அவற்றை கருணை கொலை செய்யும் முடிவு எடுக்கப்படும்.
டிரம்ப் அரசில், அரசாங்க திறனுக்கான துறையின் தலைவராக இருந்து வரும் எலான் மஸ்க், பாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ஜனாதிபதி டிரம்ப்பிடம் கடந்த ஜனவரி 20-ந்தேதி 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறையுடன் அமெரிக்கா தரப்பட்டு உள்ளது. இது வருத்தத்திற்கு உரியது என்று கூறியுள்ளார்.
பெரிய அளவிலான வீணடிப்பு, மோசடி மற்றும் முறைகேடு ஆகியவை தொடர்ந்து நடந்து, 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறைக்கு வழிவகுத்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி ரெயில் நிலைய கூட்டநெரிசலில் சிக்கி 18 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பொதுநல மனுவுக்கு பதிலளிக்க ரெயில்வேக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மருத்துவமனையில் உள்ள நாகேந்திரன் உடல் நிலை குறித்து நேரில் சென்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்க என்று வேலூர் மாவட்ட நீதிபதிக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் எக்ஸ் தளத்தின் பிரிமியம்+ சந்தாதாரர்களுக்கான மாத கட்டணம் ரூ.1750இல் இருந்து ரூ.3470 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரிமியம் + சந்தாதாரர்கள் பயன்படுத்தும் வகையில் அதிநவீன ஏஐ சேவையான கிரோக் 3 அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், வரும் 21 முதல் 23ம் தேதி வரை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஊட்டி அடுத்த மார்லிமந்து அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர். காற்று வேகமாக வீசுவதால் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.