இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Dec 2025 12:26 PM IST
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து எதிரொலி - 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் பிஎஸ்என்எல் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய இணைய சேவையும் முடங்கியுள்ளது.
மேலும், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அரசு அலுவலகங்களில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
- 20 Dec 2025 12:24 PM IST
ஆஷஸ் 3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் இலக்கு
ஹெட் கேரி இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாகி விளையாடி ரன்கள் குவித்தனர். கேரி 72 ரன்களில் வெளியேறினார். ஹெட் 172 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 349 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து 435 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
- 20 Dec 2025 12:23 PM IST
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து - தொலைத் தொடர்பு சேவை பாதிப்பு
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- 20 Dec 2025 11:48 AM IST
2 நாள் பயணமாக நெல்லை புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிருஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
- 20 Dec 2025 11:47 AM IST
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அங்கீகாரமே வாக்குரிமை தான், அதை எவரும் இழந்து விடக் கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
- 20 Dec 2025 11:45 AM IST
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன - சீமான்
பள்ளி சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் இதயத்தை நொறுக்குகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
- 20 Dec 2025 11:32 AM IST
சென்னையில் ஜன.8ம் தேதி தொடங்குகிறது புத்தகக் காட்சி
சென்னையில் ஜன.8ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.
சென்னை புத்தகக் காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது பெறுபவர்களின் பட்டியலை பபாசி நிறுவனம் வெளியிட்டது.
- 20 Dec 2025 11:26 AM IST
எஸ்.ஐ.ஆர்: விடுபட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கிறது - மு.வீரபாண்டியன்
ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பத்தில் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
- 20 Dec 2025 11:24 AM IST
பணி வழங்கப்படாததால் தூய்மைப் பணியாளர் தற்கொலை: திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி
தூய்மைப் பணியாளர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பதை மன்னிக்க முடியாது என்று அன்புமணி கூறியுள்ளார்.
- 20 Dec 2025 10:36 AM IST
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.07 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
















