மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகரும், இயக்குனருமான சந்தானபாரதி அஞ்சலி செலுத்தினார்.
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 1235 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 108.22 அடியாகவும், நீர் இருப்பு 75.905 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அன்பு மகன் இயக்குநர், நடிகர் மனோஜ் மறைவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மனோஜ் திடீர் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள பாரதிராஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பின் 4ஆவது என்கவுன்ட்டர் நடந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி மற்றும் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர். திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்த திருவான்மியூர் ஆய்வாளர் முகமது புகாரியே, செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த் ஜாபர் குலாம் ஹுசைனை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் (75) நெல்லையில் இன்று காலை காலமானார். 1977, 1980 தேர்தல்களில் அதிமுக எம்.எல்.ஏ. ஆக தேர்வான இவர் 2000ம் ஆண்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்படவே திமுகவில் இணைந்தார். 2006ல் திமுக எம்.எல்.ஏ. ஆக தேர்வான இவர், 2016ல் சஸ்பெண்ட் செய்யப்பட மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 2018ல் மீண்டும் திமுகவில் இணைந்து, 2020ல் மீண்டும் அதிமுகவில் இணைந்து அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.