இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025

Update:2025-02-27 09:13 IST
Live Updates - Page 3
2025-02-27 09:39 GMT

உத்தர பிரதேசத்தில், மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட 5 கோடி பக்தர்களின் வசதிக்காக 16 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன என மத்திய ரெயில்வே மந்திரி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

2025-02-27 09:27 GMT

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் (மார்ச் 01) கனமழை பெய்யகூடும். சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-02-27 09:07 GMT

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜா தேவி, உடல் நலக் குறைவால் காலமானார். வெல்லமண்டி நடராஜன் தற்போது ஓபிஎஸ் அணியின் அமைப்புச் செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

2025-02-27 08:15 GMT

நடிகை அளித்த புகாரில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளீர்கள்: நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என இன்று காலை சீமான் வீட்டின்முன் சம்மன் ஒட்டியது காவல்துறை. ஆனால், சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில் சீமான் வீட்டில் இருந்து வெளியே வந்த நபரொருவர் சம்மனை கிழித்துள்ளார்.

2025-02-27 07:59 GMT

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார்- கட்சி நிர்வாகி இடையே சலசலப்பு

2025-02-27 06:50 GMT

 அதிமுக பேரூராட்சி செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம்

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் 200 பேர் கைது

2025-02-27 06:25 GMT

சென்னையில் 5 கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு

மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு

2025-02-27 04:25 GMT

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து 64,080 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,010 ரூபாய்க்கும் விற்பனை

Tags:    

மேலும் செய்திகள்