நெல்லையில் 2 பேரை வழிமறித்து, அச்சுறுத்தி பணம் பறிக்க முயன்றவர் கைது

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.;

Update:2026-01-11 09:25 IST

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை வடக்கு கென்னடி தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ரவிக்குமார் (வயது 48). இவர் நெல்லை பாளையங்கோட்டை, அரசு சித்த மருத்துவக்கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்த பாளையங்கோட்டை கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த ஒருவரையும், பாளையங்கோட்டை சமாதானபுரம் வாட்டர் டேங்க் அருகே சென்று கொண்டிருந்த திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரையும் வழிமறித்து அச்சுறுத்தி பணம் பறிக்க முயன்றுள்ளார்.

அவர்கள் பணம் தர மறுத்த காரணத்தினால் அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, ஆயுதத்தால் தாக்க முயன்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 2 பேரும் கொடுத்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்