கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

Update:2025-09-27 08:32 IST
Live Updates - Page 2
2025-09-27 09:00 GMT

நமது ஓட்டம் இன்னும் வேகமாகத் தொடரும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொழில் வளர்ச்சியின் மிகச் சிறந்த குறியீடு #EmploymentGeneration-தான்; அந்த வகையில், 2021-ஆம் ஆண்டு திருச்சியில் நான் உறுதியளித்த அளவான, ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்பதையும் தாண்டி 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது திராவிட மாடல்" கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக EPFO வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தை சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2025-09-27 08:57 GMT

நாமக்கல்லில் பிரசாரம் நடக்கும் இடத்திற்கு வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய். அவருக்கு வழிநெடுக பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர் அக்கட்சி தொண்டர்களும் அவரது ரசிகர்களும்.

2025-09-27 08:57 GMT

தவெக பிரசாரத்திற்காக நாமக்கல் களத்திற்கு வந்த தொண்டர்கள் சிலர், வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

2025-09-27 08:08 GMT

கீழே விழுந்த தொண்டர்கள்

விஜயின் பரப்புரை வாகனத்தில் மோதி பைக்குடன் கீழே விழுந்த தொண்டர்கள்.. கட்டுப்பாட்டை மீறி ஆபத்தான முறையில் விஜயின் வாகனத்தை பின் தொடர்வதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. 

2025-09-27 08:06 GMT

தவெக தலைவர் விஜய் வளையப்பட்டி பகுதிக்கு வந்துள்ள நிலையில் பேருந்தை சூழ்ந்து ஆரவாரம் செய்யும் தொண்டர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2025-09-27 07:53 GMT

விஜய் பிரசாரம் - போக்குவரத்து நிறுத்தம்

கரூர், வேலுச்சாமிபுரத்தில் இன்று பிற்பகலில் விஜய் பிரசாரம் செய்யவுள்ள நிலையில், வேலுச்சாமிபுரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

2025-09-27 06:58 GMT

பிரசாரத்திற்காக நாமக்கல் மாவட்ட எல்லையில் வந்துள்ள தவெக தலைவர் விஜயை பார்க்க வழிநெடுக தொண்டர்கள் நிற்பதால், அவரது வாகனம் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதையடுத்து வாகனத்தில் இருந்தபடி முன் உள்ளவர்கள் வழிவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளார் விஜய்.

2025-09-27 06:53 GMT

விஜய் பிரசாரம் - காவல்துறை அனுமதித்த நேரம் கடந்த‌து

நாமக்கல்லில் காலை 11-12 மணி வரை பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி அளித்த நிலையில் விஜய் பிரசாரத்திற்கு நாமக்கல் காவல்துறை அளித்த நேரம் கடந்த‌து. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் பிரசார பகுதிக்கு விஜய் வரவில்லை. நாமக்கல் எல்லையில் மக்கள் வெள்ளத்தில் விஜய் வாகனம் ஊர்ந்து வருகிறது.

2025-09-27 06:47 GMT

நாமக்கல் மாவட்ட எல்லையில் தவெக தலைவர் விஜயை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

2025-09-27 06:30 GMT

நாமக்கல்லில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் எல்லைப்பகுதியான களத்தூர் சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய். அவருக்கு ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். களத்தூரிலிருந்து தனது பிரசார வாகனம் மூலம் நாமக்கல் நகருக்கு விஜய் பயணம் செய்கிறார். வழி நெடுக விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்