தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் - ஜி.கே.வாசன்
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- "தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக - தமாகா மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர் என்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ராமதாஸின் தைலாபுரம் தோட்ட இல்லத்திற்கு அவரது ஆடிட்டர் வருகை தந்துள்ளார். ராமதாசால் நேற்று நியமிக்கப்பட்ட, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ஆகியோரும் வந்துள்ளனர்.
ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
சென்னை ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். மறைந்த ராஜேஷின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.
சிறிய கிரகம் கண்டுபிடிப்பு
பூமியில் இருந்து நெப்டியூனை விட 3 மடங்கு தொலைவில் உள்ள சிறிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கிரகத்திற்கு 'பிளானட் நைன்' என பெயர் சூட்டிய அமெரிக்க விஞ்ஞானிகள்.
சமையல் எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோயா பீன்ஸ் ஆயில் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையை சரிகட்ட இறக்குமதிக்கான கலால் வரியை 10 சதவீதம் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
9 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, தென்காசி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. செமஸ்டர் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பேட்டை காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் ராஜேஷ் உடல் இன்று நல்லடக்கம்
உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன் தினம் நடிகர் ராஜேஷ் உயிரிழந்தார் (வயது 75). ராஜேஷ் உடல் இன்று கீழ்பாக்கம் கல்லறைத்தோட்டத்தில் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனமழையால் கடும் நிலச்சரிவு
சிக்கிம் மாநிலத்தில் தீவ் மற்றும் சுங்தாங் பகுதிகளில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் சேதமடைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக காசர்கோடு மாவட்டம் முளியாரில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.