ராமேஸ்வரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
இந்திய வீராங்கனை பூஜாசிங் சாதனை
ஆசிய தடகளம் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். ஷு கிழிந்த நிலையில் இருந்தபோதும், தனது விடா முயற்சி மற்றும் திறமையால் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.
தங்கம் வென்ற இந்திய வீராங்கனை
100 மீட்டர் தடை ஓட்டம், குண்டு எறிதல் உள்பட 7 பந்தயங்களை கொண்ட ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி அகசரா தங்கம் வென்றார். ஹெப்டத்லானில் தங்கம் வென்ற 3வது இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்
ரூ.639 கோடிக்கு வீடு வாங்கிய இளம் தொழிலதிபர்
மும்பையில் இந்தியாவின் மிக அதிக விலை கொண்ட வீட்டை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் இளம் தொழிலதிபர் லீனா காந்தி திவாரி. பிரபல மருந்து நிறுவனமான யுஎஸ்வி லிமிடெட்டின் தலைவரான லீனா காந்தி திவாரி, மும்பையின் வோர்லி பகுதியில் இரண்டு அதி-ஆடம்பர கடல் நோக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.639 கோடிக்கு வாங்கியுள்ளார்.
மதுரையில் முதல்-அமைச்சர் இன்று பிரமாண்ட ரோடு ஷோ
மதுரையில் திமுக சார்பில் இன்று நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் இன்று 7வது நாளாக குளிக்கத் தடை
வெள்ளப்பெருக்கு குறைந்த போதிலும் மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளில் இன்று 7வது நாளாக குளிக்கத் தடை நீடிக்கிறது.
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது சாகிப், சில தினங்களுக்கு முன்பு காலமான நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். “தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் எதுவும் அளிக்கவில்லை
சென்னை விமான நிலையத்தில், விமானபரப்பு பகுதியில் நடைபெற்று வரும், விரிவாக்க பணிகள் காரணமாக, விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் நெரிசலை குறைக்க, இந்திய விமான ஆணையம், நாளை ஞாயிற்றுக்கிழமை முதல், மாற்று ஏற்பாடுகள் செய்துள்ளது.
கேரளாவில் மாஸ்க் கட்டாயம்:பினராயி விஜயன்
தேசிய அளவில் கேரளாவில்தான் கொரோனா தொற்று அதிகமாக பதிவாகியுள்ளது. தற்போதுவரை 727 பேருக்கு அங்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சளி, இருமல், தொண்டை வலி இருப்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முதியவர்கள், கர்ப்பிணிகள், முன்களப் பணியாளர்களும் மாஸ்க் அணியுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை: மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார்.