இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 4-9-2025

Update:2025-09-04 09:18 IST
Live Updates - Page 5
2025-09-04 03:50 GMT

மின்சாதன பொருட்களான 28% ஜிஎஸ்டி 18%ஆக குறைப்பு

மின்சாதன பொருட்களான ஏசி, 32 இன்ச்-க்கு மேலான டிவி, மானிட்டர் & ப்ரொஜெக்டர், பாத்திரங்களைக் கழுவும் இயந்திரங்களுக்கு விதிக்கப்பட்ட 28% ஜிஎஸ்டி 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

2025-09-04 03:50 GMT

இங்கிலாந்து மந்திரி கேத்தரின் உடன் முதக்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தமிழ்நாடு-இங்கிலாந்து கூட்டாண்மையை ஆழப்படுத்துவது குறித்து இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார். எரிசக்தி, தகவல் தொழில்நுட்ப துறைகளில் இங்கிலாந்தின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

2025-09-04 03:49 GMT

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கும் அமெரிக்க வரி விதிப்புக்கும் தொடர்பு இல்லை - நிர்மலா சீதாராமன்

அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்த முடிவுக்கும் தொடர்பு இல்லை. இது குறித்து கடந்த 18 மாதங்களாக நாங்கள் ஆலோசித்து வந்தோம் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

2025-09-04 03:49 GMT

டெல்லியைச் சேர்ந்தவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என காத்திருந்தோம் - டிடிவி தினகரன்

டெல்லியைச் சேர்ந்தவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என காத்திருந்தோம்,ஆனால் அதற்கு வாய்ப்புத் தெரியவில்லை. டிசம்பர் மாதத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை தெரிவிப்போம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்