இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 4-9-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 Sept 2025 7:58 PM IST
சென்னையில் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் (Bio-ENZYME) தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 17.09.2025 முதல் 19.09.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
- 4 Sept 2025 7:54 PM IST
கோவா: பிட்ஸ் பிலானி விடுதியில் மாணவர் மர்ம மரணம்; ஓராண்டுக்குள் 5-வது சம்பவம்
கோவாவின் தெற்கே பிட்ஸ் பிலானி தனியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதன் விடுதியில் தங்கி மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள்.
இதேபோன்று தங்கியிருந்த ரிஷி நாயர் என்ற மாணவர் ஒருவர் இன்று காலை 10.45 மணியளவில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவருடைய மொபைல் போனை தொடர்பு கொண்டபோது, பதில் எதுவும் வரவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து அதிகாரிகள் விடுதி அறையை உடைத்து உள்ளே சென்றனர்.
- 4 Sept 2025 7:52 PM IST
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,205 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31 ஆம் தேதி நள்ளிரவு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. .இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, தற்போது வரை 2,205 பேர் பலியானதும், 3,394 பேர் படுகாயமடைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் படையினர் சென்றடைய மிகவும் கடினமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை, மலைக் கிராமங்களில் வசித்த மக்களின் நிலைக்குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், பலி எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
- 4 Sept 2025 7:42 PM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கோவை, நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 4 Sept 2025 7:20 PM IST
‘எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாக மாறிவிட்டார்' - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், 4 அடுக்குகளை கொண்ட ஜி.எஸ்.டி. வரியை 2 அடுக்காக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' தள பதிவில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை முழு மனதுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாக மாறிவிட்டார் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
- 4 Sept 2025 5:30 PM IST
துரைமுருகனுக்கு பிடிவாரண்டை அமல்படுத்த சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு
வருமானத்திற்கு கூடுதலாக சொத்து சேர்த்த வழக்கில், துரைமுருகனுக்கு பிடிவாரண்டை அமல்படுத்த சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
- 4 Sept 2025 5:23 PM IST
14-ம் போப் லியோவுடன் இஸ்ரேல் ஜனாதிபதி நேரில் சந்திப்பு
இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் இன்று 14-ம் போப் லியோவை நேரில் சந்தித்து பேசினார். இதற்காக, வாகன அணிவகுப்பு மற்றும் பலத்த பாதுகாப்புடன் அபோஸ்தலிக் அரண்மனைக்கு ஹெர்ஜாக் சென்று சேர்ந்துள்ளார்.
இந்த சந்திப்பு பற்றி இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக்கின் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், பணய கைதிகளை விடுவிப்பது. யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான போர் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் கிறிஸ்தவ சமூகத்தினரை பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவதற்கான முயற்சிகளை பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
- 4 Sept 2025 5:08 PM IST
4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 4 Sept 2025 3:29 PM IST
கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் பருத்தி வீரன் சரவணன் மீது புகார்
தானும், சரவணனும் கடந்த 1996 முதல் 2003ஆம் ஆண்டு வரை திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து, அதன் பின்பு 2003இல் திருமணம் செய்து கொண்டோம். எனக்கு பராமரிப்பு தொகையாக ரூ.40 லட்சம் தருவதாக கூறியும் அவர் ஏமாற்றி விட்டார்.
















