குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.;
குற்றாலம்,
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராகியுள்ளது. நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, குற்றாலம், மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது . இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.