தூய்மை இந்தியா திட்டத்தில் மரக்கன்று நடும் விழா: தூத்துக்குடி கலெக்டர் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 24,000 மரக்கன்றுகளும், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 48,000 மரக்கன்றுகளும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மறவன்மடம் பகுதியில் இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணியினை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் துவக்கி வைத்தார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தூத்துக்குடி சார்பாக "தூய்மையை சேவை இயக்கம்" (Swachhata Hi Sewa) திட்டத்தின் கீழ் தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் (தூத்துக்குடி FCI ரவுண்டனா முதல் திருநெல்வேலி KTC நகர் வரை) சுமார் 24,000 மரக்கன்றுகளும் மற்றும் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் (மதுரை வளையங்குளம் முதல் தூத்துக்குடி FCI ரவுண்டானா வரை) சுமார் 48,000 மரக்கன்றுகளும் நடுவதற்கு திட்டமிடப்பட்டு, இன்றைய தினம் மறவன்மடம் பகுதியில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மரக்கன்று நடும் விழாவினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரால் மரக்கன்றுகள் நடப்பட்டு, இயற்கை வளம் மற்றும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், திட்ட இயக்குநர் சிவம்ஷர்மா, இந்திய தேசிய நெடுஞ்சாலை அலுவலக இணைப்பு அலுவலர் இளங்கோ, பொறியாளர்கள் கலைச்செல்வன், வீராராஜேஷ்மணி, முருகன், சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.