தென்காசி பஸ் விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசுப்பணி
தென்காசியில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.;
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று முன் தினம் காலை இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மல்லிகா என்ற பெண்ணும் உயிரிழந்தார். மல்லிகாவுக்கு பார்வை மாற்றுத்திறனாளியான கீர்த்திகா என்ற மகள் உள்ளார். தந்தை ஏற்கனவே இறந்த நிலையில் விபத்தில் தாயையும் இழந்த கீர்த்திகா பரிதவித்து வருகிறார்.
இந்நிலையில், தென்காசி பஸ் விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண் கீர்த்திகாவுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, கீர்த்திகாவுக்கு புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா எண்ட்ரி பணி வழங்கப்பட்டுள்ளது. பணி ஆணையை தென்காசி மாவட்ட கலெக்டர் விரைவில் வழங்க உள்ளார்.