ஈரோடு: தீரன் சின்னமலை சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.;
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கோவையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு சென்றுள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 605 கோடி செலவில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ஈரோடு - அறச்சலூர் ஓடாநிலையில் உள்ள விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.