காசியும், ராமேசுவரமும் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள் - சி.பி.ராதாகிருஷ்ணன்

அப்துல் கலாமை தந்த மண்ணில் இந்த விழாவை கொண்டாடுவது நம் அனைவருக்கும் பெருமை என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.;

Update:2025-12-30 17:22 IST

சென்னை,

ராமேசுவரத்தில் நடைபெற்றத காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது;-

இந்த தேசம் வாழ்க என்று சொல்லும் நாம் தமிழுக்கு எதிரானவர்களா? . இல்லை. எப்படி தேசம் ஒரு கண் தேசன் என்று சொன்னால், இன்னொரு கண் தங்க தாய் மொழி நம் தமிழ் தான். அதனை யாராலும் மாற்ற முடியாது. மோடி அழகாக சொன்னார். தொன்மையான காசி நகரமும் உலகத்தின் தொன்மையான மொழியான தமிழும் இணைகிறது என்று சொன்னால் தான் அது காசி தமிழ் சங்கமம் என்று சொன்னார்கள்.

அப்துல் கலாமை தந்த மண்ணில் இந்த விழாவை கொண்டாடுவது நம் அனைவருக்குமே பெருமை. ராமேசுவரம் மண்ணில் இந்த இரண்டு ஒளி விளக்குகள் காசியும், தமிழும் சங்கமிக்கும் விழாவாக இது நடைபெறுகிறது. தமிழகத்தின் வீதியில் இருந்து தேசியத்தை பற்றி யோசித்து பாடியவர் பாரதியார். எத்தனை மொழிகளை நாம் பேசிநாலும் தர்மத்தின் பிரகாரம் நாம் வாழ வேண்டும் என்கிற உயர்த தத்துவம் தான் இன்று இந்திய தேசத்தை ஒருங்கிணைந்த தேசியமாக மாற்றி இருக்கிறது.

காசியையும், ராமேசுவரத்தையும் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள். உலகில் பாரதம் உச்சம் தொடும்போது, பாரதத்தில் தமிழகம் உச்ச நிலையை தொட வேண்டும். வளமான தமிழகம், வளமான இந்தியா. பாரதத்தை எந்த தீய சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்