தவெக மாநாடு: பாரபத்தியை சுற்றியுள்ள 3 பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை
பள்ளி மாணவர்கள், வீடு செல்ல வசதியாக, அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
மதுரை,
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் தொடங்கியிருக்கும் நிலையில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக மாநாடு காரணமாக, சாலைகளில் கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகரம் முழுவதும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழியும் நிலையில், பள்ளி மாணவர்கள், வீடு செல்ல வசதியாக, அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் உள்ள அரசுப் பள்ளிகள் அரைநாள் விடுமுறை அறிவித்து மாணவர்களை விரைவாக வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.