வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் சாமி தரிசனம்
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த விஜய் முடிவு செய்தார்.;
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த விஜய் முடிவு செய்தார்.
அதன்படி , நாளை காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கியூ ஆர் கோர்டு உடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்ட 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த உள்ள நிலையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் உள்ள முருகன் கோவிலில் ஆனந்த் இன்று சாமி தரிசனம் செய்தார்.