சென்னையில் நவீன மீன் அங்காடி: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
நவீன மீன் அங்காடி மீன் வியாபாரிகளின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்;
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, நம்முடைய திருவல்லிக்கேணி தொகுதி - சிந்தாதிரிப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் சிங்காரச்சென்னை 2.o திட்டத்தின் கீழ், ரூ.2.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியை இன்று திறந்து வைத்தோம்.
இந்த நவீன மீன் அங்காடி, நம்முடைய தொகுதியில் உள்ள மீன் வியாபாரிகளின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்பதில் மகிழ்கிறோம். என தெரிவித்துள்ளார் .