துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று சென்னை வருகை

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று சென்னை வருகிறார்.;

Update:2025-01-31 06:56 IST

சென்னை,

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு, மாமல்லபுரத்தில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொள்வதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வருகை தருகிறார். இதையொட்டி சென்னை விமான நிலையம், அவர் தங்கி செல்ல உள்ள கிண்டி கவர்னர் மாளிகை, அவர் பயணிக்கும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை போலீஸ்துறை அறிவித்துள்ளது.

எனவே இந்த இடங்களில் 'டிரோன்', ஏர் பலூன் போன்றவற்றை பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு (இ.சி.ஆர்.) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மாமல்லபுரம் சாலையை (ஓ.எம்.ஆர்.) மாற்றுப்பாதையாக பயன்படுத்தி செல்லலாம். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வளாகங்களும், விமான நிலையம் முதல் இ.சி.ஆர். வரை உள்ள சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்