விழுப்புரம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

விருத்தாசலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய திருமணமான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-01-19 05:09 IST

கோப்புப்படம் 

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் வீரமணி (வயது 26). திருமணம் ஆனவர். இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியிடம் பேசி பழகி வந்ததாக தெரிகிறது. அப்போது ஆசைவார்த்தை கூறி அந்த சிறுமியை வீரமணி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதனால் சிறுமிக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து சிறுமியை சிகிச்சைக்காக பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதை கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கர்ப்பமாக்கிய வீரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்