விருதுநகர்: தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.;

Update:2025-11-02 17:23 IST

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருநாதன். இவருக்கு சொந்தமாக சஞ்சீவி மலை அடிவாரப் பகுதியில் நூற்பாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நூற்பாலையில் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணியளவில் நூற்பாலையில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் நூற்பாலையில் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நூற்பாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு, இயந்திரங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்