சென்னையில் வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து

அளவுக்கு அதிகமான துணியை துவைக்க போட்டதால் வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2025-05-29 18:46 IST

கோப்புப்படம்

சென்னை,

கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சிவன் கோவில் பகுதியில் சேர்ந்தவர் கண்ணன். இவர் துணிகளை துவைப்பதற்காக வீட்டில் உள்ள வாஷிங் மெஷினில் அதிகளவிலான துணிகளை போட்டு ஆன் செய்துள்ளார்.

இதனால் வாஷிங் மெஷினில் இருந்து புகை வந்தது. இதனையடுத்து வாஷிங் மெஷின் உடனடியாக வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீயானது மளமளவென பரவத்தொடங்கியது. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்