தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சினை: தீர்வு காணப்படுமா..? அமைச்சர் பதில்
தரமணி பகுதியில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி அடைந்துள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர், ஹசன் மவுலானா, தரமணி பகுதியில் குடிநீர் இல்லாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர், போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது எனவே நடவடிக்கை எடுக்கப்படுமா..? என்று கேள்வி எழுப்பினார்.
இதில் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.