ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர உறுதி ஏற்போம் - சசிகலா

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கிறது என்று சசிகலா கூறினார்.;

Update:2025-03-09 21:57 IST

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடையில் உள்ள பிரசித்திப்பெற்ற தர்காவில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சசிகலா பங்கேற்று பேசியதாவது:-

புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு நோன்பு தயாரிக்க தேவையான அரிசியை ஜெயலலிதா வழங்கினார்.

உலமாக்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.750-ல் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார். இதுபோல இஸ்லாமிய சகோதர, சகோதரிகளை ஆதரித்து அவர்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக நின்று போராடுவோம். வருகிற சட்டசபை தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்