பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து கடலில் குதித்தது யார்? - பரவும் வீடியோவால் பரபரப்பு

தடுப்புச் சுவரின் மேலே ஏறி நின்று ஆண் ஒருவர், கடலில் குதிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.;

Update:2025-10-10 07:47 IST


ராமேசுவரம் அருகே பாம்பன் கடலின் நடுவே ரெயில் மற்றும் ரோடு பாலங்கள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள், பாம்பன் ரோடு பாலம் வழியாக தங்களது வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருகிறவர்கள் பாம்பன் ரோடு பாலத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தி, கடலின் அழகை வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.

இதனிடையே பாம்பன் ரோடு பாலத்தின் மையப்பகுதியில் தடுப்புச் சுவரின் மேலே ஏறி நின்று ஆண் ஒருவர், கடலில் குதிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவை ராமேசுவரத்தில் இருந்து சென்ற ரெயிலில் பயணித்த பயணி ஒருவர், பாம்பன் பாலத்தை ரெயில் கடந்தபோது இயற்கை காட்சிக்காக தனது செல்போனில் பதிவு செய்தபோது, அந்த நபர் கடலில் குதித்த காட்சியும் அதில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட நிலையில், வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடலில் குதித்த அந்த நபர் யார், அவரது கதி என்ன, எதற்காக ரோடு பாலத்தில் நின்று கடலில் குதித்தார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்