திருவண்ணாமலையில் விமான நிலையம் அமையுமா..? - அமைச்சர் சிவசங்கர் பதில் 

கீழ்பொண்ணாத்தூர் தொகுதியில் ஒரு போக்குவரத்து பணிமணை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.;

Update:2026-01-23 11:23 IST

சென்னை,

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தில் பேசிய துணை பேரவைத் தலைவர் பிச்சாண்டி, கீழ்பொண்ணாத்தூர் தொகுதியில் ஒரு போக்குவரத்து பணிமணை அமைக்க வேண்டும் என்றும், திருவண்ணாமலைக்கு அதிக பக்தர்கள் வருவதால், உதான் திட்டத்தின் கீழ் ஒரு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், “நிதி ஆதாரத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்தால் பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலைத்தை பொறுத்த வரையில் புரியாத புதிராக உள்ளது. அவருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்