வழிகேட்பது போல் நடித்து பெண்ணிடம் 2 பவுன் தங்க செயின் பறிப்பு - கோவையில் பரபரப்பு
செயின் பறிப்பு சம்பவம் குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கோவை,
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அருகம்பாளையத்தை சேர்ந்த அன்னபூரணி என்பவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள், அன்னபுரணி அருகே சென்று சோமனூர் செல்வதற்காக வழிகேட்டுள்ளனர்.
அன்னபூரணி வழி சொல்லிக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருந்த நபர் சட்டென அன்னபூரணியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை பிடித்து இழுத்தார். இதனால் அன்னபூரணி கூச்சலிட்ட நிலையில், செயினை பறித்துக் கொண்டு இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அன்னபூரணி அளித்த புகாரின் அடிப்படையில் சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், செயின் பறிப்பு தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.