குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட 4 டன் பழங்கள் அகற்றும் பணி தீவிரம்

தென்மேற்கு பருவமழை காரணமாக பழக்கண்காட்சியின் இறுதி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.;

Update:2025-06-01 10:32 IST
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட 4 டன் பழங்கள் அகற்றும் பணி தீவிரம்

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டும் கோடை விழாவையொட்டி மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற்றன.

இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்கண்காட்சி கடந்த 23-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் மொத்தம் 4 டன் பழங்களால் பல்வேறு உருவங்கள் அலங்கரிக்கப்பட்டன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கண்டு ரசித்து உற்சாகம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தியதால் பழக்கண்காட்சியின் இறுதி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.மேலும் தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்கி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்பட்டிருந்த 5 லட்சம் மலர் செடிகள் அழுக தொடங்கின. அதுமட்டுமின்றி பழக்கண்காட்சியில் இடம்பெற்ற உருவ அலங்காரங்களில் உள்ள பல்வேறு பழங்களும் அழுக தொடங்கின.

இந்தநிலையில் உருவ அலங்காரங்களில் உள்ள அனைத்து பழங்களையும் அகற்றும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவைகளை உரமாகவும், விதைகள் சேகரித்து நாற்றுகள் தயாரிக்கவும் தோட்டக்கலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்