திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்

மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.;

Update:2025-04-18 06:34 IST

சட்டசபையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

மருதமலை முருகன் கோவிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் அடிப்படை வசதிகளுடன் அறுங்கோண வடிவத்தில் அமைக்கப்படும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதிதாக 184 அடி உயர மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்படும்.

திருச்செந்தூர், முருகன் கோவிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்