மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம்

சர்வதேச பாரம்பரிய தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.;

Update:2025-04-18 09:55 IST

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், சர்வதேச பாரம்பரிய தினம் இன்று (ஏப்ரல் 18 ) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இன்று கட்டணமின்றி இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் உள்ள புராதன சின்னங்களையும் இன்று சுற்றுலாப் பயணிகள் இன்று ஒரு நாள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்