எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு
2025-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.;
சாகித்ய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கி வருகிறது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகளைப் பெறும் எழுத்தாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழில் இந்த ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது, 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுவ புரஸ்கார் விருது 'கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதை தொகுப்புக்காக மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் லட்சுமிஹருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.