கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

மாணவியின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.;

Update:2025-08-17 09:31 IST

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 27). இவர், திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவியை, நவீன்குமார் காதலிப்பதாகக்கூறி தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்