காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை சரமாரியாக தாக்கிய வாலிபர்

படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update:2025-03-27 08:57 IST

கோப்புப்படம் 

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (19 வயது). பெரவள்ளூரில் உள்ள ஒரு துணி கடையில் வேலை செய்து வருகிறார். இவர், பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவியை காதலித்து வந்ததாகவும், இவரது நடவடிக்கை சரியில்லாததால் அந்த மாணவி இவருடன் பழகுவதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், தன்னை மீண்டும் காதலிக்க வலியுறுத்தி பள்ளி மாணவியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்