திருமணமான 3 ஆண்டில் இளம்பெண் தற்கொலை; திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம்

மகா லெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.;

Update:2025-08-25 23:44 IST

திருவண்ணாமலை மாவட்டம் வட ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருண். இவருக்கும் மகா லெட்சுமி (வயது 25) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. அருண் ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார். மகா லெட்சுமி வட ஆண்டாப்பட்டியில் உள்ள கணவர் வீட்டில் வாழ்ந்து வந்தார். மகா லெட்சுமியின் தந்தை மதுரையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மகா லெட்சுமியிடம் அவரது மாமியார் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமை செய்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த மகா லெட்சுமி இன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மகா லெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்