தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.;

Update:2025-10-23 14:09 IST

சென்னை,

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தமிழ்நாட்டின் வடக்கே நிலைகொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கர்நாடக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதைபோல நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. இதனால், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இது, அதற்கு அடுத்த 24 மணிநேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்