கனமழை எச்சரிக்கை; தயாராக இருக்க 10 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்

அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கவும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.;

Update:2025-11-15 19:51 IST

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16-ல் தொடங்கியது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை. இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertising
Advertising

இதேபோன்று, நாளை மறுநாள் (17-ந்தேதி) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம். புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ள நிலையில், பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்க 10 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கவும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்