சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.;

Update:2025-05-20 07:15 IST

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.

நங்கநல்லூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், மதுரவாயல், கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் தற்போது இதமான சூழல் நிலவி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்