காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை

தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.;

Update:2025-06-13 21:36 IST

வடக்கு கர்நாடகா - தெலுங்கானா - ஆந்திரா பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தின் வெள்ளைகேட், நத்தப்பேட்டை, களக்காட்டூர், வாலாஜாபாத், தாமல், பாலுசெட்டி சத்திரம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்