சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.;
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாம்பரம், குரேம்பேட்டை, வண்டலூர், முடிச்சூர், கிண்டி, பரங்கிமலை, ஆலந்தூர், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்த இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் சற்று சிரமம் அடைந்தனர். சென்னையில் இந்த மோசமான வானிலையால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன. சென்னை கிண்டியில் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.