சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.;
சென்னை,
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் , சென்னை பூவிருந்தவல்லி , ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கடுமையான வெயிலுக்கு நடுவே சிறிது நேரம் குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.