பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் பலி
மோதலின்போது பாதுகாப்புப்படையினர் 4 பேர் காயமடைந்தனர்.;
லாகூர்,
பாகிஸ்தானின் பைபர் பக்துவா மாகாணம் தெற்கு வாசிர்தான் மாவட்டம் ஆசன் வார்சக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் இடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலின்போது பாதுகாப்புப்படையினர் 4 பேர் காயமடைந்தனர்.