அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-03-23 07:27 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணம் லாஸ் குரூசஸ் பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நேற்று இரவு சட்டவிரோதமாக கார் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, திடீரென இரு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்